மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவையை தொடங்க வலியுறுத்தல்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு தலைமையில் மதுரை டிராவல் கிளப் உறுப்பினர்கள் டெல்லியில் அஜித்சிங்கிடம் இதற்கான கோரிக்கை மனுவைக் கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை புதிய விமான நிலையமானது 18 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் 20 குடியேற்ற சோதனை மையங்கள், 16 நுழைவு வாயில்களுடன் பிரம்மாண்டமாக அமைகிறது. 375 கார்களும் 10 பேருந்துகளும் நிறுத்தவும் வசதி கொண்ட இந்த புதிய விமான நிலையமானது ஒரே நேரத்தில் 4 பெரிய விமானங்களைக் கையாளக் கூடியது.
மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடியாக ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டது. மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மேலும் தென்மாவட்டங்களில் இருந்து மட்டும் துபாய்க்கு 1,600 பயணிகளும், சிங்கப்பூருக்கு 1,100 பயணிகளும், மலேசியாவுக்கு 1,300 பயணிகளும், மஸ்கட்டுக்கு 1,000 பயணிகளும், கொழும்புக்கு 1,200 பயணிகளும், மாலேவுக்கு 400 பயணிகளும், ஐரோப்பிய நாடுகளுக்கு 200 பயணிகளும் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதனால் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த அஜித்சிங், மதுரையிலிருந்து கொழும்பு செல்வதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இதேபோல் மதுரையிலிருந்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சேவையை இயக்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குழுவினர் ஏர் இந்தியாவின் தலைவர் ரோகித் நத்தனையும் சந்தித்து மனு கொடுத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications