தொடர் விடுமுறைகள்- திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: தொடர் விடுமுறைகளால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.இதனால் சாமி தரிசனம் செய்ய 28 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறைகளைத் தொடர்ந்து மேதின விடுமுறையும் வருவதால் திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளிக்கிழமை முதல் கூட்டம் கட்டுக்கடாங்கமல் குவிந்து கொண்டே இருக்கிறது. திருப்பதியில் அனைத்து விடுதிகளிலும் அறைகள் நிரம்பிவிட்டன.
இலவச வரிசையில் சாமி தரிசனம் செய்ய 28 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. கட்டண தரிசனத்தைப் பொறுத்தவரையில் 50 ரூபாய் சாமி தரிசனம் செய்வோர் 20 மணி நேரமும், 300 ரூபாய் கட்டணத்தில் சாமி தரிசனம் செய்வோர் 7 மணிநேரமும் காத்திருக்கின்றனர். பாதயாத்திரையாக செல்வோர் 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை இதுவரையில்லாத அளவாக 1 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இதேபோல் மொட்டை எடுக்கும் இடம் மற்றும் பிரசாதமான லட்டு தரும் கவுண்டர்களிலும் கடுமையான நெரிசல் உள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து திரும்புவதால் பேருந்துகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டது. தனியார் வாகனங்கள் தங்களது இஷ்டத்துக்கு கட்டண வசூல் வேட்டை நடத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications