மனோன்மணியம் பல்கலை-பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் சஸ்பெண்ட்!
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேதியியல் துறை தலைவர் செல்லமணி பாலியல் புகார் காரணமாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் செல்லமணி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாகக் கூறி மாணவ, மாணவியர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
3-வது நாளாக நீடித்த போராட்டத்தின் போது சென்னை பல்கலைக் கழக கூட்டுக்குழுத் தலைவரும் சட்ட செயலாளருமான ஜெயச்சந்திரனுடன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பல்கலைக் கழக பதிவாளர் மாணிக்கம்., மாணவ மாணவயிருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சர்ச்சைக்குரிய பேராசிரியர் செல்லமணி மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்று மாணவர்கள் தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் இரா.செல்வராஜ் பல்கலைக் கழகத்துக்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர் தரப்பில் 15 பேர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் செல்வராஜ், பேராசிரியர் செல்லமணியை 45 நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்வதாக தெரிவித்தார்.
இருப்பினும் 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி பேராசிரியர் செல்லமணியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றனர் மாணவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications