போதுமான மாணவர் சேர்க்கை இல்லை: ஆந்திராவில் 55 கல்லூரிகளை மூட அனுமதி

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 40 தொழிற்கல்லூரிகளை மூடடுவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக கவுன்சிலான ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளதாக அதன் இயக்குநர் மற்றும் மண்டல அதிகாரியான ஏ.கே. கங்கால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

ஆந்திர மாநிலத்தில் இருந்து 55 தொழிற்கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி கோரி எங்களுக்குக் கடிதங்கள் வந்துள்ளன. இதில் 24 எம்.சி.ஏ., 14 எம்.பி.ஏ. கல்லூரிகள், 5 பொறியியல், 5 பார்மசி மற்றும் 3 தொழில்நுட்ப வளாகங்கள் அடங்கும். இந்த கல்லூரிகளின் வேண்டுகோளை ஏற்று 15 நாட்களுக்குள் அவற்றை மூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கல்லூரிகளுமே போதுமான மாணவர் சேர்க்கை இல்லை என்ற காரணத்தையே தங்களது கல்லூரிகளை மூடுவதற்கான காரணமாக தெரிவித்துள்ளன.

ஆந்திர மாநிலத்தில் மட்டும் 940 எம்.பி.ஏ. கல்லூரிகள், 636 எம்.சி.ஏ. கல்லூரிகள் உள்ளன. எம்.சி.ஏ.வைப் பொறுத்தவரையில் மொத்தம் 31,181 இடங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் முதல் கட்டமாக கடந்த 9443 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகின. 21,738 இடங்கள் காலியாகவே இருந்தன.

எம்.பி.ஏ.வைப் பொறுத்தவரையில் 62,860 இடங்களுக்கு 23141 இடங்களே பூர்த்தியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+