அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய பஞ்சாப் அமைச்சருக்கு 1 ஆண்டு சிறை
சண்டிகர்: அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் மாநில விவசாயத்துறை அமைச்சர் தோடாசிங்குக்கு ஓராண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
பஞ்சாப் அமைச்சர் தோடாசிங் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார், வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தார் என வழக்குத் தொடரப்பட்டது. இதில் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
அமைச்சர் அபராதத்தைக் கட்டவில்லையெனில் மேலும் 6 மாதங்கள் அவர் சிறையிலிருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால் அமைச்சர் உடனடியாக அபராதத் தொகையைக் கட்டிவிட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்ய அவரை நீதிமன்றம் அனுமதித்தது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அமைச்சரவையில் இருந்த ஜாஹிர் கவுர் மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 2-வது அமைச்சராக தோடாசிங் சிறைக்குப் போகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications