பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் விண்ணப்பங்கள் 11-ந் தேதி முதல் வழங்கப்படும்: மன்னர் ஜவஹர்

நாமக்கல் அருகே ராசிபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டு 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் இருந்தன. அதில் 45 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகள் தொடங்கப்படுவதாலும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படுவதாலும், கல்லூரிகளில் இன்டேக் இடங்கள் கேட்டு இருப்பதாலும் இடங்களின் எண்ணிக்கை கூடுதலாகும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆர்க்கிடெக்சர், எம்.பி.ஏ. போன்ற படிப்புகளுக்கு 29 கல்லூரிகளும், பொறியியல் படிப்புக்கு 525 கல்லூரிகளும் உள்பட 554 கல்லூரிகள் உள்ளன. ஏ.ஐ.சி.டி.இ. இடமிருந்து இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் இடங்களி விவரம் தெரிந்துவிடும். அதன்பிறகு தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு எத்தனை இடங்கள் உள்ளன என்பது தெரியும்.
அதிக இடங்கள் இருப்பதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும். பொறியியல் படிப்புக்கு சென்ற ஆண்டு இருந்த கல்வித்தகுதியே இந்த ஆண்டும் நீடிக்கும். சென்னையில் மட்டும் கவுன்சிலிங் நடத்தப்படும். மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் தேதி அறிவித்தபிறகு அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தப்படும்.
கவுன்சிலிங் எப்போது?
ஆனால் அதற்குரிய தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கவுன்சிலிங் தேதியை அதற்கான குழுதான் முடிவு செய்யும். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி தள்ளிப்போவதால் பொறியியல் கவுன்சிலிங் தேதி தள்ளிப் போகும் என்று சொல்ல முடியாது.
பொறியியல் படிப்புக்கு வருகிற 11-ந் தேதி முதல் 31-ந் தேதி முடிய விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகத்தில் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுவதால் அனைவரும் சிரமமின்றி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை பொதுபிரிவினர் ரூ.500 கட்டணமும், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250-ம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் தங்களது நிரந்தர சாதிச் சான்றிதழின் நகலை அளிக்க வேண்டும். இந்த ஆண்டு 2 லட்சம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications