மதுரை ஆதீனத்திற்கு வந்த சோதனை... வரலாற்றிலேயே முதல் முறையாக ஐடி ரெய்டு!!

இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு சைவ மடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக வந்ததே இல்லை. அப்படி ஒரு சம்பவம் எங்குமே நடந்ததாக வரலாறு இல்லை. மேலும் அப்படி ஒரு சோதனை குறித்து யாருமே கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. காரணம், அந்த அளவுக்கு இந்த மடங்கள் அனைத்தும் மிக மிக அமைதியாக, எந்தவித சலசலப்பும் இன்றி செயல்பட்டு வந்ததே.
ஆனால் ஒரே நாளில் அத்தனையையும் போட்டு உடைத்து விட்டார் மதுரை ஆதீனம் தனது ஒரே ஒரு முடிவால். மதுரை ஆதீனத்தின் பழமை, அதன் பாரம்பரியம், அதற்கு இருந்த நல்ல பெயர் என அத்தனையையும் போட்டு உடைத்து விட்டார் தற்போதைய ஆதீனம் என்று மதுரை மக்கள் புலம்புகிறார்கள்.
இதுவரை வராத வருமான வரி சோதனையையும் அவர் கூடவே கூட்டிக் கொண்டு வந்து விட்டார் என்றும் ஆதீனத்தை குற்றம் சாட்டுகிறார்கள் சைவ அமைப்பினரும்.
இதுவரை நடந்திராந்த இப்படி ஒரு செயல் நடக்க மதுரை ஆதீனத்தின் சமீ்ப கால செயல்பாடுகளே காரணம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கமும், பணமும் பெருமளவில் இங்கு புழங்க ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணம் அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த நிலைக்கு ஆதீனத்தை தள்ளி விட்டு திருஞான சம்பந்தரின் பெயரையும் சேர்த்துக் கெடுத்து விட்டார் மதுரை ஆதீனம் என்கிறார்கள் சைவ அமைப்பினர்.
இதுவரை இல்லாத அளவுக்கு இங்கு பெண்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தனி நபரைப் புகழ்ந்து பாடி கோஷம் போட்டு ஆடுகிறார்கள். இதெல்லாம் ஆதீனத்தின் பாரம்பரியத்திற்கு நல்லதல்ல என்று சைவ அமைப்பினர் எச்சரிக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள சைவ மடங்களிலேயே மூத்ததும்,பழமையானதுமான மதுரை ஆதீனத்திற்கு வந்த இந்த சோதனை, மதுரைக்கே வந்த சோதனையாகத் தெரிவதாக சைவ அமைப்பினர் வருத்தப்படுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications