பாசி மோசடி: ஐஜி பிரமோத்குமாருக்கு நெருக்கமான பெண் டிஐஜி சிக்குகிறார்
கோயம்புத்தூர்: திருச்சி பாசி நிறுவன மோசடிகளை மறைக்க பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ள ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு உடந்தையாக இருந்ததாக பெண் டி.ஐ.ஜி ஒருவரும் சிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் பாசி நிறுவனம் பொதுமக்களிடம் கூடுதல் வட்டித் தருவதாகக் கூறி ரூ.1500 கோடி அளவுக்கு மோசடி செய்தது. இந்த மோசடி குறித்து விசாரிக்காமல் இருக்க பாசி நிறுவனத்தினரிடமிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பணமாக அப்போது ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் பெற்றிருப்பதும் தெரியவந்தது..
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லியில் தலைமறைவாக இருந்த பிரமோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடக்கத்தில் எதனையும் தெரிவிக்க மறுத்துவந்தார் பிரமோத்குமார். பின்னர் அவருக்கு பணம் வாங்கிக் கொடுத்த இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தியபோது அனைத்தையும் பிரமோத்குமார் ஒப்புக் கொண்டார்.
தற்போது பிரமோத்குமாருக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு பெண் டி.ஐ.ஜியின் பெயரும் அடிபடத் தொடங்கியிருக்கிறது. எங்கு சென்றாலும் அந்த பெண் டிஐஜி இல்லாமல் பிரமோத்குமார் செல்லமாட்டார் என்கிற அளவுக்கு நெருக்கமாம்.
பாசி நிறுவன பங்குதாரர்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு எந்த வகையில் அந்த பெண் டி.ஐ.ஜி. உதவியாக இருந்தார் என்பது பற்றியும் விசாரணை நடத்த சி.பி.ஐ.அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் பாசி நிதி நிறுவனத்திடம் பேரம் பேசிய அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், ரவுடிகள் ஆகியோரும் அடுத்தடுத்து சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications