கல்யாணத்திற்குப் போன இடத்தில் கல்வீச்சை சந்தித்த அமைச்சர்!

கமுதி அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் நேற்று அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டு திருமணம் நடந்தது. இதில் பங்கேற்க அமைச்சரும், பரமக்குடி எம்.எல்.ஏவுமான சுந்தர்ராஜ் வந்தார். கல்யாணத்தையொட்டி அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அருகில் உள்ள கோவிலில் அது தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு சென்றார் அமைச்சர். போன இடத்தில் திருக்கோவில் அன்னதானத் திட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார். அத்தோடு நிற்காமல், இங்கு நடக்கும் அன்னதானத்திற்கும் கூட அம்மாதான் காரணம் என்று ஒரு புளோவில் பேசி விட்டார்.
இதைக் கேட்டு கஷ்டப்பட்டு காசு போட்டு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடுப்பாகி விட்டனர். அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சிலர் அமைச்சரை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர். இதைப் பார்த்து அமைச்சர் பயந்து போனார். உடனே அவசரம் அவசரமாக அங்கிருந்து வெளியேறி வேகம் வேகமாக தனது காரில் ஏறி போயே போய் விட்டார்.
கல்யாணத்திற்குப் போன இடத்தில் கல்வீச்சை சந்தித்த அமைச்சரின் கதைதான் தற்போது பரமக்குடி முழுவதும் பேச்சாக உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications