என்னை துரத்த முடிவு செய்துவிட்டார்கள்: பிரணாப் முகர்ஜி
டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் சிறந்த நபர் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்கிறது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அல்லது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில்,
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு சிறந்த நபர். அவர் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படும் ஒரே அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான். அதனால் பிரணாபை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறோம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறோம் என்று ஒரே வாழ்த்து மழையாகப் பொழிந்தார்.
இதைக் கேட்ட பிரணாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மற்றவர்களும் சிரித்தார்கள். பிரணாப் தனது இருக்கையில் இருந்து எழுந்து, ஆக மொத்தம் நிதியமைச்சகத்தில் இருந்து என்னை நீக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
ஹமீது அன்சாரி அல்லது பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்தினால் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தெரிவித்ததற்கு நேர்மாறாக யஷ்வந்த் சின்ஹா பிரணாபை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications