ஊழல் ஆயுத புரோக்கர்களை முதலில் பிடிக்க வேண்டும்- ராணுவ தளபதி வி.கே. சிங்

கிழக்கு மாநில மக்கள் மற்றும் அவர்களின் கலச்சாரம் குறித்த 3 புத்தகங்கள் வெளியீட்டு விழா திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ முகாமில் நேற்று நடந்தது. குணால்வர்மா, தீப்தி பல்லா ஆகியோர் எழுதியுள்ள இந்த புத்தகங்களை கேரள முதல்வர் உம்மன்சாண்டியும், ராணுவ தளபதி வி.கே. சிங்கும் வெளியிட்டனர்.
பின்னர் வி.கே. சிங் நிருபர்களிடம் கூறியதாவது,
வடகிழக்கு மாநிலங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அமைதியாக உள்ளன. மற்ற துறைகளில் இருப்பதை போல் ராணுவத்திலும் ஊழல் அதிகமாகிவிட்டது. அதை மறுக்க முடியாது. ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழலை ஒழிக்க தவறான முறையில் செயல்படும் ஆயுத புரோக்கர்களை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான விஷயத்தில் வெளிப்படையான கொள்கை கடைபிடிக்கப்படும். தரம் குறைந்த ஆயுதங்கள் மற்றும் ஆயுத உபகரணங்களை இந்திய ராணுவம் ஒருபோதும் பயன்படுத்தாது. ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதை களைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்னுடைய பிறந்த தேதி தொடர்பான சர்ச்சையை தவிர்க்க வேண்டும். எந்த தாக்குதலையும் சமாளிக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications