பாசி மோசடி : ஐ.ஜி. பிரமோத்குமார் பணி இடை நீக்கம்!
திருப்பூர் : ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த திருப்பூர் பாசி நிதிநிறுவன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.ஜி. பிரமோத்குமார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் லஞ்சம் பெற்றது தொடர்பாக தமிழக போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்தும், சி.பி.ஐ. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கைதான பிரமோத்குமார் குறித்து சி.பி.ஐ. போலீசார் மத்திய-மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பிவிட்டனர். இதன் அடிப்படையில் ஐ.ஜி. பிரமோத்குமார் மீது தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணி இடை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.
இதனிடையே 5 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து அவரை செவ்வாய்கிழமை மீண்டும் ஜெயிலில் அடைத்தனர். பணி இடை நீக்க உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகள் மூலம், அவரிடம் வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது












Click it and Unblock the Notifications