தமிழகத்தில் ஆறுதல் தரும் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் கோடையின் உச்சமான கத்திரி வெயில் வெளுத்துக் கட்டி வரும் நிலையில் பல இடங்களில் கோடைமழை ஆறுதல் அளித்து வருகிறது.
மதுரை, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, கொடைக்கானல் மற்றும் வத்தலகுண்டு ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. மேலும் இடி-மின்னல் தாக்கியதில் அன்னூர் நால்ரோடு அருகே உள்ள வெண்மணி நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயிரிழந்தார்.
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் மலைப்பாதையில் 7 இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் வாகனப்போக்குவரத்து முடங்கியது. பல கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன..
சேலம் சுற்றுவட்டாரங்களிலும் பலத்த மழையால் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூரமங்கலத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்திலலும் சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை நகரில் ஒரு மணிநேரம் கொட்டித் தீர்த்தது மழை. சிவகங்கை மாவட்டத்திலும் சூறாவளியுடன் கூடிய மழை பெய்ததால் வாழைத் தோட்டங்கள் நாசமாகின.
வெய்யிலூர் என்றழைக்கப்படும் வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் மழை பெய்து ஆறுதலைத் தந்தது.












Click it and Unblock the Notifications