அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அறிக்கை சாதகமாக உள்ளது: உம்மன்சாண்டி

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்ற குழுவின் அறிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை மேலும் 100 ஆண்டுகள் பலமாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது உண்மை தான். இருப்பினும் சில நிபந்தனைகளுடன் கேரள அரசு புதிய அணையை கட்டலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே புதிய அணை கட்டத் தேவையான நடவடிக்கையை கேரள அரசு எடுக்கும். இது தொடர்பாக உச்ச நீதமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது கேரள அரசு தெரிவிக்கும். அணை பலமாக உள்ளது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து உயர்த்தக் கூடாது. உச்ச நீதிமன்ற குழுவில் இடம் பெற்ற நீதிபதி தாமஸ், கேரளாவின் பிரதிநிதி மட்டுமே. குழுவில் கேரளாவுக்கு சாதகமான கருத்துகளை அவர் கூறியுள்ளார். ஆனால் அணையின் பாதுகாப்பு குறித்து மட்டும் அவர் கேரளாவி்ன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications