மதுரையில் பாஜக மாநில மாநாடு தொடங்கியது- இரவு அத்வானி பேசுகிறார்

பாஜகவின் 5வது மாநில மாநாட்டை தாமரைச் சங்கமம் என்றபெயரில் மதுரையில் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த மாதமே நடந்திருக்க வேண்டிய மாநாடு இது. ஆனால் கன மழை காரணமாக மாநாடு இன்று காலை 10 மணிக்கு் தொடங்கியது. 2 நாட்கள் மாநாடு நடைபெறும்.
விரகனூர் ரிங் ரோட்டில் கிட்டத்தட்ட 37 ஏக்கர் நிலப்பரப்பில் ஜனா கிருஷ்ணமூ்ர்த்தி நகர் என்று பெயரிடப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு அதில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு மேடையை தாமரைப் பூ வடிவல் அமைத்துள்ளனர்.
மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியேற்றி மாநாட்டை அகில இந்தியத் தலைவர் நிதின் கத்காரி தொடங்கி வைத்தார்.
இன்று மாலை அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், இல.கணேசன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். மாநாட்டையொட்டி பெருமளவிலான தொண்டர்கள் குவி்ந்துள்ளனர்.
இன்று பொது மாநாடாக இது நடைபெறும். நாளை கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
மாநாட்டில் பல லட்சம் தொண்டர்களைத் திரட்டி திராவிடக் கட்சிகளுக்கு தங்களது பலத்தைக் காட்ட பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் தொண்டர்களைத் திரட்டி வர விரிவான ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோரிடம் நுழைவுக் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படும். நுழைவுச் சீட்டுப் பெறுவோரிடம் 3 வேளை சாப்பாட்டுக்குரிய டோக்கனையும் கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் மதுரை அண்ணா நகர் பகுதியில் சைக்கிளில் வெடிகுண்டு வைத்து அது வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு மிக பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அத்வானி தங்கும் இடம், மாநாட்டுத் திடல் உள்ளிட்டவற்றுக்கு தீவிரப் பாதுகாப்பும், கண்காணிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருவதால் பாஜகவினர் மட்டுமல்லாது பிற கட்சியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications