புதுக்கோட்டை இடைத் தேர்தல் 'ஜோதியில்' ஐக்கியமாக தேமுதிக முடிவு?

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தற்போதைக்கு பெரிய கட்சியாக அதிமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்து போட்டியிடுகிறது, தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளது. திமுக, சிபிஐ, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்து விட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக நிலைதான் குழப்பமாக இருந்து வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. தேமுதிகவின் ஆதரவைப் பெறவும் அது திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது தேமுதிக தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இது உண்மையாக இருந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது. மாறாக, தேமுதிகவுக்கு ஆதரவு தரும் முடிவை அது எடுக்கலாம். நேற்று சென்னையில் விஜயகாந்த் தலைமையில்நடந்த மாவட்ட்ச செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசித்து இந்த முடிவை விஜயகாந்த் எடுத்ததாக நம்பப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன்தான் வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது.
தேமுதிக போட்டியிட்டால் அக்கட்சிக்கு திமுகவும் தனது மறைமுக அல்லது நேரடியான ஆதரவை நல்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை விஜயகாந்த் ஏற்றால், திமுக நினைத்தபடி தமிழக அரசியல் கூட்டணியில் புதிய திருப்பம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications