நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்த வழக்கும், ஆதீனத்திற்கு எதிரான வழக்கும் தள்ளுபடி!

இந்து மக்கள் கட்சி சார்பில் நித்தியானந்தாவுக்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் கூறுகையில், நித்தியானந்தாவை 293வது மதுரை ஆதீனகர்த்தராக அறிவித்துள்ளார் தற்போதைய மதுரை ஆதீனகர்த்தர். தமிழகத்தின் மிகப் பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.
292வது ஆதீனகர்த்தர் தற்போது நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவரை சூழ்நிலைக் கைதியாக வைத்துள்ளனர். மேலும் எந்தவித விதிமுறைகளையும் கையாளாமல் இந்த நியமனத்தை 292வது ஆதீனம் செய்துள்ளார்.
எனவே இந்த நியமனத்தை உடனடியாக செல்லாது என்று அறிவிக்க வேண்டும். நித்தியானந்தா மீது கர்நாடக கோர்ட்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. சைவை மரபுகளை நித்தியானந்தா பின்பற்றுபவரல்ல. எனவே மதுரை ஆதீன மடத்தை தமிழக அரசு தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், மதுரை ஆதீனம் மடம் தொடர்பாக புகார்கள் வந்தால் அரசு அதை கையகப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இதுவரை புகார் ஏதும் வரவில்லை என்று கூறியிருந்தார்.
அதேபோல தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் சார்பில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை ஆதீன நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும். மதுரை ஆதீனம் சூழ்நிலைக் கைதியாக உள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இன்று இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது இரு மனுக்களையும் நிராகரிப்பதாக நீதிபதிகள் அறிவித்து தள்ளுபடி செய்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications