கே.ஜி. பாலகிருஷ்ணன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதான நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
வழக்கு என்ன?
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். அவர் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரும் அவரது உறவினர்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தனர் என்பதால் அவரை மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளவரை குடியரசுத் தலைவர்தான் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதனால் குடியரசுத் தலைவரின் அறிவுரையைப் பெற்று உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.எஸ். செளகான், ஜே.எஸ். கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றம் கேட்டறிந்தது.
தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி பாலகிருஷ்ணன் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் நீதிபதி பாலகிருஷ்ணன் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக மத்திய அரசே முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications