வீடு ஆக்கிரமிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி, மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவு வட்டாரத்தில் முக்கியமானவரான அட்டாக் பாண்டி, அவரது மனைவி உள்ளிட்ட 3 பேரை வீடு ஆக்கிரமிப்பு வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த கால திமுக ஆட்சியின்போது மதுரையில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தவர்களில் பாண்டியும் ஒருவர். முன்னாள் திமுக அமைச்சர் தா.பாண்டியன் கொலை வழக்கு, மதுரை தினகரன் அலுவலகம் தாக்குதல் வழக்கு உள்ளிட்டவற்றில் தொடர்புடையவராக கூறப்பட்டவர்.

அதிமுகஆட்சிக்கு வந்ததும் அழகிரி ஆதரவாளர்கள் பலரும் ரவுண்டப் செய்யப்பட்டனர். அவர்களில் அட்டாக் பாண்டியும் ஒருவர். கடந்த ஆண்டு இவர் வீடு அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவரது மனைவி தயாளு வீடு ஆக்கிரமிப்பு வழக்கில் கைதாகியுள்ளார். அவர் தவிர அட்டாக் பாண்டி, அவரது கார் டிரைவர் ஆகியோரும் கைதாகியுள்ளனர்.

இவர்களை மதுரை மாவட்ட நில ஆக்கிரமிப்பு தடுப்புக் குழு போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த மூன்று பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+