'ஜிம்'முக்குப் படையெடுத்த 10 அடி நீள மலைப் பாம்பு!
Subscribe to Oneindia Tamil
விக்கிரமசிங்க புரம்: நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே 10 அடி நீள மலைப் பாம்பு உடற்பயிற்சி நிலையம் அருகே வந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து பாம்பைப் பிடித்து காட்டுக்குள் கொண்டு போய் விட்டனர்.
வி.கே.புரம் கிருஷ்ணன் கோவிலை அடுத்த வடக்கு கோடைமேல் அழகியான் கால்வாய் அருகே உடற்பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு செல்லும் வழியில் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு கிடந்தது.
இதுகுறித்து பயிற்சி மைய உரிமையாளர் வடிவேல் பாபநாசம் வனச்சரகர் பொன்ராஜூக்கு தகவல் தெரிவித்தார். வனவர் சூப்பரராவ் தலைமையில் வனக்காப்பாளர் பிச்சை, வேட்டை தடுப்பு காவலர் அய்யனார் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்தப் பாம்பை பாபநாசம் கோதையாறு மலைப் பகுதியில் கொண்டு போய் விட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications