சென்னையில் நாளை மறுநாள் குலுக்கல் மூலம் ஹஜ் பயணிகள் மூலம் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2012-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்த உள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. இதனால் மத்திய ஹஜ் குழுவின் அறிவுறுத்தலின் படி நாளை மறுநாள் குறா எனப்படும் குலுக்கல் நடைபெற உள்ளது..
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்தில் ஆனைக்கார் அப்துல் ஷூக்கர் கலையரங்கத்தில் நாளை மறுநாள் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.
ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் கலந்து கொள்ள தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications