ராணுவ தளபதியின் ரகசிய கடிதத்தை லீக் செய்தது பெண் அதிகாரி? மத்திய அரசு விளக்கம்
டெல்லி : நாட்டின் ராணுவ தளவாடங்கள் இருப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தலைமை தளபதி வி.கே.சிங் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதன் பின்னணியில் அமைச்சரவை செயலக மூத்த பெண் அதிகாரி ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதனை நிராகரித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவ தளபதி வி.கே.சிங் அண்மையில் எழுதிய கடிதம் ஒன்றில், ராணுவத்தில் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்துகளும், ஆயுதங்களும் பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த ரகசிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது.
ரகசியக் கடிதத்தை அம்பலப்படுத்தியது ஒரு தேசத்துரோகச் செயல் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து ரகசிய கடிதம் வெளியானது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விசாரணையில் மத்திய அமைச்சரவை செயலகத்தின் உளவு அமைப்புகளைக் கையாளும் பொறுப்பு வகித்த ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தான் ரகசிய கடிதத்தை ஊடகங்களில் கசியவிட்டவர் எனத் தெரியவந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான உடனேயே நேற்று இரவே மத்திய அரசு இதனை மறுத்து அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது, இது தொடர்பான வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications