நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்தவும், அதனை பரப்பும் கொசுக்களை அடியோடு ஒழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் பகுதிகளில் தொடங்கி மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பாளையங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நோய்க்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.

டெங்கு கொசுக்களையும், அதன் முட்டைகளையும் அடியோடு ஒழிக்க சுகாதாரத் துறை சார்பில் அனைத்து வட்டார பகுதிகளிலும் ஒரு மாதத்திற்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இதற்காக சென்னையைச் சேர்ந்த 19 பூச்சியியல் வல்லுனர் குழுவினர் நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கண்காணப்பில் வீடுகள் தோறும் சேகரித்து வைக்கப்படும் குடிநீரில் டெமிபாஸ் என்ற டெங்கு கொசு முட்டைகளை அழிக்கும் மருந்து தெளிக்கப்படுகிறது.

இதற்காக 100 வீடுகளுக்கு 1 நபர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணி 6 நாட்களுக்கு ஒரு முறை என தொடர்ந்து 1 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும். இவர்களது பணியை மருத்துவக் குழுவினரும் கண்காணிப்பர். உயிருடன் உள்ள கொசுக்களை அழிக்க வீடுகளுக்கு உள்ளே கொசுமருந்து புகை அடிக்கப்படும். இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் தொடங்கின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+