2 வாரத்தில் ஆ. ராசா மீண்டும் கைதாவார்: சுப்பிரமணிய சாமி

2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா 15 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஆ.ராசா இன்னும் 2 வாரங்களில் மீண்டும் கைதாவார் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆ.ராசா நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளபோதிலும் இரண்டு வாரங்களில் மீண்டும் கைது செய்யப்படுவார். 2ஜி உரிமம் பெற்று அதை டெலினார் நிறுவனத்திற்கு கைமாற்றிய யுனிடெக் நிறுவனம் ஆ.ராசாவுக்கு வெளிநாட்டு வங்கி மூலம் ரூ.275 கோடி பணம் கொடுத்துள்ளதை தற்போது சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த புதிய முறைகேடு தொடர்பாக இரண்டு வாரங்களில் ராசா மீண்டும் கைதாவார். மேலும் பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடைய உள்துறை அமைச்சர் ப.சிதமபரத்தை பிரதமர் மன்மோகன் சிங் உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications