கேரளாவில் தன்னை கொத்திய பாம்பை போதையில் கடித்தவர் பலி: பாம்பும் இறந்தது
திருவனந்தபுரம்: கேரளாவில் குடிபோதையில் தன்னைக் கடித்த பாம்பை கடித்தவர் பலியாகினார். அவர் கடித்ததில் அந்த பாம்பும் இறந்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளரடை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். சுமை தூக்கும் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இவரது கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி பிரித்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு புஷ்பாகரன் பணியை முடித்து விட்டு வழக்கம்போல் போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் கிடந்த ஒரு நல்ல பாம்பை பார்க்காமல் அதை மிதித்துவிட்டார். இதையடுத்து அந்த பாம்பு அவரை கடித்தது. வலியால் துடித்த புஷ்பாகரன் அந்த பாம்பை பழி வாங்க தீர்மானித்தார். பாம்பை விரட்டிச் சென்று பிடித்து அதை கடித்து குதறினார்.
இதில் அந்த பாம்பு இறந்தது. ஆனால் சிறிது நேரத்தில் உடலில் விஷம் ஏறி அவர் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்கள் புஷ்பாகரனை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
-
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications