போஜ்புரியில் பேசி லோக்சபாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ப.சிதம்பரம்!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று லோக்சபாவில் போஜ்புரியில் பேசி அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நன்றாகத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று லோக்சபாவில் பீகார், உத்தரப் பிரதேச பகுதிகளில் பேசப்படும் மொழியான போஜ்புரிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து கொடுப்பது பற்றிய தீர்மானம் குறித்து ப.சிதம்பரம் பதில் அளித்தார்.
அப்போது அவர் என்னால் உங்கள் அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது என்பதை ஹம் சப்கே பாவ்னா சம்ஜத் பானி என்று போஜ்புரியில் கூறினார்.
இதைக்கேட்டதும் அவையில் இருந்த அனைவரும் ஆச்சரியத்தில் அமைதியாகிவிட்டனர். பிறகு சிதம்பரத்தின் புதிய முயற்சியை பாராட்டி மேஜைகளைத் தட்டி கரகோஷம் எழுப்பினர். போஜ்புரிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து கொடுப்பது குறித்து 2 கமிட்டிகள் சமர்பித்துள்ள அறிக்கைகளைப் பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இத்தனை ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் சிதம்பரம் இதுவரை இந்தியில் பேசியதில்லை. அப்படி இருக்க அவர் தனது தாய்மொழியான போஜ்புரியில் பேசியதைக் கேட்ட சபாநாயகர் மீரா குமார் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், சிதம்பரம் போஜ்புரியில் பேசியதில் பெருமகிழ்ச்சி. போஜ்புரிக்கு அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை விரைவில் அவர் தெரிவிப்பார் என்று நம்புகிறோம் என்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications