மோடிக்கு செக் வைக்கும் கத்காரி- செயற்குழு கூட்டத்துக்கு கேசுபாய்க்கு அழைப்பு

குஜராத் மாநில மூத்த பாஜக தலைவர் கேசுபாய் பட்டேல். 2001-ல் முதல்வராக கேசுபாய் இருந்தபோது இடைத் தேர்தல்களில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் ஒரே நாள் இரவில் அவரை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு நரேந்திர மோடியை முதல்வராக்கியது கட்சி மேலிடம். அன்றுமுதல் இன்றுவரை தம்மை அசைகக் முடியாத சக்தியாக, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்கிற நிலை வரைக்கும் வந்துவிட்டார் மோடி.
ஆனால் தற்போது கேசுபாய் வடிவில் குடைச்சல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக மோடிக்கு எதிராக தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் கேசுபாய் பேசி வருகிறார். அவர் மீது கட்சி மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலின் போது பொறுப்பாளராக சஞ்சய் ஜோஷியை கத்காரி நியமித்திருந்தார். சீன் சிடி விவகாரத்தில் ஓரங்கட்டப்பட்ட சஞ்சய் ஜோஷியை மீண்டும் கத்காரி முன்னிறுத்தியதால் கடும் அதிருப்தி அடைந்தார் மோடி. அம்மாநில தேர்தல் பிரச்சாரத்துக்கும் செல்லவில்லை.
இதனால் மும்பையில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை மோடி புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார். இதிலும் கூட மோடியை கத்காரி கடுப்பேற்றியிருக்கிறார்.
பாஜகவிலிருந்து முழுவதும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட கேசுபாய் பட்டேலுக்கு தேசிய செயற்குழுவுக்கு வருமாறு கத்காரி அழைப்பு அனுப்பியிருக்கிறார். ஏற்கெனவே கத்காரி மீது அத்வானி, அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் காட்டத்தில் இருக்கின்றனர். இந் நிலையில் கேசுபாய்க்கு அழைப்பு அனுப்பியதில் மோடியும் செம கடுப்பில் இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்லப்பிள்ளை என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் பாஜக தலைவர்கள் தவிக்கின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications