பேச்சைக் குறைச்சுட்டு செயலைக் காட்டுங்க: மமதாவுக்கு காங்கிரஸ் அறிவுரை
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது பேச்சைக் குறைத்துவிட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வராக மமதா பானர்ஜி பொறுப்பேற்று ஓராண்டாவதையொட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:
மேற்குவங்க மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. மாநிலத்தில் பல திட்டங்களை அவர் அறிவித்திருந்தார். ஆனால் அந்தத் திட்டங்கள் எதுவுமே நடைமுறைக்கு வந்த மாதிரி தெரியவில்லை.
இதனால் மமதா பானர்ஜி பேச்சைக் குறைத்துக் கொண்டு நடவடிக்கைகளை செயலில் காட்ட வேண்டும் என்றார் அவர்.
காங்கிரஸ் எம்.பி.யின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ், தேர்தலின் போது தங்களால் எதையுமே சாதிக்க முடியாதவர்கள் எல்லாம் இப்படிப் பேசுகின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications