ரேகா பதவியேத்தா என்னை எதுக்கு ராஜ்யசபா டிவியில் காட்டணும்?: ஜெயா பச்சன் பாய்ச்சல்

நடிகை ரேகாவை காங்கிரஸ் கட்சி மாநிலங்களைவை உறுப்பினராக பரிந்துரைத்தது. அதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை ரேகா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது ராஜ்யசபா தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சனை அடிக்கடி காண்பித்தனர்.
ரேகா பதவியேற்கும்போது தன்னை எதற்காக வீடியோவில் காண்பி்த்துக் கொண்டே இருந்தனர் என்று மாநிலங்களவை தொலைக்காட்சி ஒளிபரப்பு செயலாளர் மீது ஜெயா பச்சன் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஹமீது அன்சாரி மாநிலங்களவை தொலைக்காட்சி சிஇஓவை அழைத்து இது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் ஜெயா பச்சன் அப்படி எந்த புகாரும் கூறவில்லை என்று மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
ஜெயா பச்சனுக்கும், ரேகாவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் உண்டு. இந்நிலையில் ரேகாவுக்கு மாநிலங்களைவையில் ஜெயா பச்சன் அருகில் இருக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் ஜெயா அதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து தனது இருக்கையை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேகாவுக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே ஒரு காலத்தில் காதல் இருந்ததாகப் பேசப்பட்டது. அந்த விவகாரத்தால் தான் ரேகாவும், ஜெயா பச்சனும் எதிரிகளாகிவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications