திருச்சியில் காருக்குள் பிணமாக கிடந்த சென்னை ஓட்டுநர்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காருக்குள் சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் தனியார் வெல்டிங் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தொழில் விஷயமாக திருச்சி பெல் நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று வருவார். இவரது ஓட்டுநர் ராகவேந்திரர்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் திருச்சி வந்த சீனிவாசன், மத்திய பேருந்து நிலையம் அருகே ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டுநர் ராகவேந்திரர் காரிலேயே படுத்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று காலை ராகவேந்திரரை ஓட்டல் அறையிலிருந்து செல்போன் மூலம் சீனிவாசன் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் ராகவேந்திரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் காரில் சென்று பார்த்தார். அப்போது காரில் அமர்ந்தபடியே ராகவேந்திரர் பிணமாகக் கிடந்தார்.
இதுபற்றி போலீசாருக்கு சீனிவாசன் தகவல் கொடுத்தார். ராகவேந்திரர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காருக்குள் சோதனை நடத்தியதில் மதுபாட்டில்களும், சில மாத்திரைகளும் கிடந்தன. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால்தான் ராகவேந்திரர் இறந்தாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகவேந்திரர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications