டெங்கு: நெல்லை மாவட்ட சுகாதர அதிகாரியை மாற்றிய அமைச்சர் விஜய்
நெல்லை: நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியானதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மீரான் மைதீனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் அதிரடி மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தையே உலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கு 21 பேர் பலியாகியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. சுகாதாரத் துறை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக இணை இயக்குனர், கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து விஜயம் செய்தனர்.
அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஏற்பாட்டின்படி கடையநல்லூரில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் பொதுமக்களை வெகுவாக பாதித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்துவது குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கெள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய், அமைச்சர் செந்தூர்பாண்டியன், கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். அப்போது ரத்த வங்கி செயல்படாமல் இருப்பதையும், டெர்மட்டாலஜி இயந்திரம் இயங்காமல் இருப்பதையும் கண்டறிந்தனர். மேலும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 21 பேர் பலியானதைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீனை இடமாற்றம் செய்து அமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications