திருவிழான்னா முன்னாடியே சொல்லிட்டு செய்ங்கைய்யா: மின்வாரியம்
சென்னை: கோவில் திருவிழாக்கள் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுக்குமாறு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சமீப காலமாக கோவில் தேர்த் திருவிழாக்களில் மின்கம்பிகளில் தேர் பகுதிகள் உரசி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க திருவிழா நடப்பதை முன்னதாகவே அந்தந்தப் பகுதியில் உள்ள அலுவலகம், உதவிக் கோட்டம், கோட்டம் அல்லது வட்ட அலுவலகங்களுக்குத் தெரிவித்தால், விழா நடக்கும் பகுதியில் குறுக்கே அல்லது அதன் வழியாக செல்லும் மின் பாதையில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மின் விபத்துகளைத் தடுக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே கோவில் திருவிழாவின்போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் அதை தூக்கிச் சென்ற 3 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவில் கூடுக்கு அருகில் சென்ற வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர். இது போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து தான் மின்வாரியம் திருவிழாக்களை முன்கூட்டியே அறிவி்த்துவிட்டு நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications