காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: ஜூனில் மின்வெட்டு நேரம் குறையும்

தமிழகத்திற்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் மாநிலத்தில் கடும் மின் வெட்டு ஏற்படுகிறது. சென்னையில் 2 நேரமும் மற்ற நகரங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் 5 மணி நேரத்திற்கு அதிகமாக மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் காற்றாலை மூலம் அதிகளவில் மின்சாரம் கிடைத்ததால் சில நாட்கள் மின் வினியோகம் தடையில்லாமல் இருந்தது. ஆனால் இதற்கிடையே மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.
காற்று வேகம் குறைந்ததால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறைந்தது. இதனால் மின் வினியோகம் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டது. எனினும் அவ்வப்போது காற்றாலை மின்சாரம் மூலம் மின்வெட்டு நேரம் தவிர மற்ற நேரத்தில் மின்சாரம் ஒழுங்காக வழங்கப்படுகிறது.
காற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று காற்றாலை மூலம் 1,900 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இதையும் சேர்த்து மொத்தம் 10,100 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது.
காற்று சீசன் தொடங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இன்னும் 15 நாட்களுக்குள் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி துவங்கும். கூடங்குளம் அணு மின் நிலையத்திலும் விரைவில் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. இதனால் வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு நேரம் குறைய வாய்ப்பு உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு.. டிடிவி தினகரன் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications