மருத்துவ கல்லூரி முறைகேடு- அன்புமணி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு மே மாதம் முதல் 2009 ஏப்ரல் வரை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலத்தில், போதிய கட்டமைப்பு வசதி இல்லாத இந்தூர் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.அ
இந்த வழக்கில் அன்புமணி உட்பட 10 பேர் மீது கடந்த ஏப்ரல் 27-ந் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தல்வந்த்சிங் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் வி.கே.சர்மா, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கே.வி.எஸ்.ராவ் மீது வழக்கு தொடருவதற்கு தொடர்புடைய உயர் அதிகாரியிடம் இருந்து ஒப்புதல் ஆணையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் வழக்கில் தொடர்புடைய சில ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜுலை மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதி தல்வந்த்சிங் ஒத்தி வைத்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications