கருணாநிதி யார்?.. சமத்துவப் பெரியாரா?, உற்ற நண்பரா?, இலக்கிய ஏந்தலா?

இது குறித்து திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகத் தமிழ் சமுதாயத்தின் ஒப்பற்ற பாதுகாவலர், தலைவர் கலைஞரின் 89வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2ம் தேதி (சனிக்கிழமை) மாலை கலைஞரை பாடிப் பாராட்டி போற்றும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சுகவனம் எம்.பி., சேலம் ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தொடக்கமாக தஞ்சை செல்வி ஐய்யப்பன் குழுவினரின் நாட்டுப்புற தெம்மாங்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதை தொடர்ந்து திராவிட கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மக்களாட்சியின் மாண்பறிந்தவர் என்ற தலைப்பிலும், திருமாவளவன் சமத்துவப் பெரியார் எனும் தலைப்பிலும், காதர் மொய்தீன் சிறுபான்மையினரின் சீரியக் காவலர் எனும் தலைப்பிலும், பொன்.குமார் உழைப்போரின் உற்ற நண்பர் எனும் தலைப்பிலும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா இலக்கிய ஏந்தல் எனும் தலைப்பிலும் கருத்துரை வழங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெசோ அமைப்புக்கு மறு உயிர் தரும் திமுகவின் நடவடிக்கைகளின்போது தனக்கு அந்தக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று திருமாவளவன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந் நிலையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications