சிஏஜி எங்களை குறை சொல்லலைஜி!.. திமுக ஆட்சியைத் தான் சொன்னாரு..!: ஓ.பன்னீர்செல்வம்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்வது வழக்கமாக நடப்பது ஆகும். பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடரின் முடிவில் தணிக்கை அறிக்கை சட்டசபையில் வைக்கப்படும்.
31-3-2011-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை சட்டசபையில் 16.5.2012 அன்று வைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டு இருந்தன. இது பல பத்திரிகைகளிலும் வெளியானது.
தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றவை ஆனால், இந்த தவறுகள் எல்லாம் தற்போதைய அதிமுக ஆட்சியில் நடைபெற்றது போன்ற தோற்றத்தை சில பத்திரிகைகள் உருவாக்கி விட்டன.
தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, குறைபாடுகள், முறைகேடுகள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியில் தான் நடந்தது என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.
31.3.2011ம் நாளுடன் முடிவடைந்த நிதியாண்டில், தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்ததாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்டு 23 பொதுத் துறை நிறுவனங்களில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 2010-2011ம் நிதியாண்டில், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.10,294.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்துக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்துக்காக மின்சார வாரியத்துக்கு ஒரு குதிரை சக்திக்கு ரூ.250 என்று தமிழக அரசு வழங்கும் தொகை மிகவும் குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், இந்த தொகையை ரூ.1,750 ஆக உயர்த்தி வழங்கியது. இதன் மூலம் தணிக்கை அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்ட குறை நிவர்த்தி செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் நஷ்டத்தை குறைக்க அதிமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிதி பற்றாக்குறையை போக்க அரசின் வருமானங்களை பெருக்கவும் அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்க்கவும், வனங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 32 மாவட்டங்களிலும் அதிகளவில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இப்படி, பல துறைகளிலும் முன்னேற்றத்தை காண அதிமுக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications