எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த ஜாகீர் உசேன்

புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 25ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப் பெற வரும் 28ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அன்று மாலையே இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீனிவாசன்,முத்தரையர் சங்கம் சார்பில் சிவப்பிரகாசம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பொது வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துமாரி, அதே வளாகத்தில் உள்ள முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், தாசில்தாருமான கருப்பையா ஆகியோரிடம் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வரலாம். 3 வாகனங்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படும், வாகனங்களை 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்திவிட்டு வர வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாளே தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு எம்.ஜி.ஆர்., அம்பேத்கார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பிறகு அவர் தேர்தல் அதிகாரி முத்துமாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை 4 பேர் முன்மொழிந்தனர்.
அதிமுக வேட்பாளர் அடுத்த வாரமும், ஐஜேகே வேட்பாளர் வரும் 23ம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications