புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: சரத்குமார்

அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரிப்பதென சென்னையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணனும், நானும் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து எங்களது ஆதரவை தெரிவித்தோம். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விரைவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டசபை கூட்டத் தொடரில் அதிமுக அரசுக்கு சரத்குமார் பெரும் ஆதரவு தெரிவித்துப் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவினரை கடுப்பேற்றிய சரத்குமார்:
இரு தினங்களுக்கு முன் சட்டசபையில் முதல்வர் பொறுப்பேற்ற ஓராண்டு சாதனை தொடர்பாக ஜெயலலிதாவை பல்வேறு கட்சியின் பாராட்டிப் பேசினர்.
சரத்குமார் பேசும்போது, விஜய்காந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு, எதிர்கட்சியினர் மக்கள் குறைகளை வெளியே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். வாக்களித்த மக்களுக்கு கடமையாற்றும் விதமாக எங்கே வந்து பேசவேண்டுமோ அங்கே வந்து அவர்கள் பேசவில்லை என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் எழுந்து கூச்சலிட்டதோடு சரத்குமாரை நோக்கி கையை நீட்டி ஆவேசமாகப் பேசினர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
பின்னர் பேசிய சரத்குமார், நான் யாரையும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படியிருந்தும் கொந்தளிக்கிறார்கல் என்றால் குற்றம் உள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்பார்கள். அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். என்னை நோக்கி கை நீட்டி பேசுகிறார்கள். அதனால் எனக்கு கோபம் வராது. நான் மனிதாபிமான பண்பு உள்ள மனிதன்’’ என்றார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications