அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் நாட்டு குண்டு வெடித்ததால் பதற்றம்
திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் காவல்நிலையம் மற்றும் அருகில் உள்ள டீக்கடையின் கண்ணாடிகள் சிதறின. இரண்டு வீடுகளின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டது.
வெடிசத்தம் கேட்டவுடன் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் வெடிசத்தம் கேட்ட இடம் நோக்கி விரைந்து ஓடி வந்தனர். போலீஸ் நிலையத்தில் குப்பை கொட்டும் இடத்தில் வெடிகுண்டு வெடித்தது தெரிய வந்தது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகள் வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்வையிட்ட விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
"திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பாலிதீன் பையில் இருந்துள்ளது. கத்திரி வெயிலால் ஏற்பட்ட வெப்பத்தில் அந்த வெடிமருந்து வெடித்து சிதறியுள்ளது" என்பது போலீசாரின் கருத்து.
ஆனால் நக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய விவேக் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருவது நக்சல்களுடன் தொடர்பு பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் திருக்கோயிலூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்கள் இருளர் இனப்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய சம்பவத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications