நித்யானந்தா ஆசிரமங்களில் சிபிசிஐடி விசாரணை!

மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா முடிசூட்டப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மடாதிபதிகளும் ஆதீனங்களும் சிவனடியார்களும் எதிர்க்கின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நித்யானந்தாவின் தியான பீடங்களில் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 2 இடத்தில் நித்யானந்தா தியான பீடம் அமைந்துள்ளது.
தியான பீட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீசார் திடீரென விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நித்யானந்தா தியான பீட நிர்வாகி சரவண பாபு கூறுகையில், "ஓசூரில் 2 இடங்களில் எங்கள் தியான பீடம் உள்ளது. இங்கு வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் போன் மூலம் சில தகவல்களை கேட்டனர். தியான பீடம் எத்தனை உள்ளது. எங்கு அமைந்துள்ளது. எவ்வளவு பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது போன்ற விவரங்களைக் கேட்டனர். நாங்கள் விவரங்களை தெரிவித்தோம். மற்றபடி அவர்கள் எதற்காக விசாரித்தார்கள் என நாங்களும் கேட்கவில்லை, அவர்களும் தெரிவிக்கவில்லை," என்றார்.
வேறு சில இடங்களிலும் சிபிசிஐடி போலீசார் நேற்றும் இன்றும் விசாரணை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications