மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் உள்துறை அமைச்சகம் நடக்கவில்லை: ஜெ. புகாருக்கு ப.சி. மறுப்பு
சிவகங்கை: தமிழக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் பாரபட்சமாக நடத்துவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்த குற்றச்சாட்டை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், தமிழகம் உட்பட எந்த ஒரு மாநிலத்துக்கு எதிராகவும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை என்று கூறியதுடன் தம்ழக அரசுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் அவர் பட்டியலிட்டார்.
மேலும் இலவசத் திட்டங்களால் மட்டுமே ஒரு மாநிலம் முதல் மாநிலமாகிவிட முடியாது என்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக உள்கட்டமைப்புத் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.
இதேபோல் மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட புரட்சிகரமான திட்டம் என்றும் இதன் மூலம் தனியார் பள்ளிகளிலும்கூட பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற தேசியவாத பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்று பகிரங்மாகாவே ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications