செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு: இலங்கையில் ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி செங்கல்பட்டு ஈழத் தமிழ் அகதிகள் முகாமில் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்கள் இறந்த சொந்தங்களுக்காக மலர் தூவி, கல்லறை அமைத்து தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.
சில நாட்களுக்கு முன் இந்த தமிழர்கள் தங்களை இந்த சிறை முகாம்களில் இருந்து விடுவிக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணா நிலை போராட்டம் நடத்தியிருந்தனர். கொட்டடிக்குள் கிடக்கின்ற போதும் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இவர்கள் நினைவஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.












Click it and Unblock the Notifications