முதியோருக்கு ரூ.200 ஓய்வூதியம் வழங்குவது அவர்களை அவமானப்படுத்துவதாகும்: ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: முதியோர்களுக்கு மாதம் ரூ.200 ஓய்வூதியம் வழங்குவது அவர்களை அவமானப்படுத்துவதாகும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையை உயர்த்துமாறு அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் பென்ஷன் திட்டத்தின்படி நாட்டில் 60 வயதை கடந்த 3 கோடி பேருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.200க உள்ளது. இது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அதனால் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதா மாதம் பணம் கிடைப்பதில்லை. மாறாக சில மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக வழங்கப்படுகிறது. இம்முறையை மாற்றி மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பரிஷத் ஓய்வூதிய திட்ட கன்வீனர் பாபா ஆதவ் மற்றும் அருணா ராய் ஆகியோரை ஜெய்ராம் ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள், பரிஷத் ஓய்வூதிய திட்டத்தில் வறுமைக் கோடுக்கு கீழ் என்ற வறைமுறையை அகற்ற வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.200ல் இருந்து ரூ.300க உயர்த்த வேண்டும், ஓய்வூதியம் பெறும் வயதை ஆண்களுக்கும் 60ல் இருந்து 55கவும், பெண்களுக்கு 50கவும் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
ஆனால் வயது வரம்பை குறைக்க ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக் கொள்ளவில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications