புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் போட்டி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட சூப்பர்ஸ்டார் ரஜினி மன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
இவர் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக உள்ளார். இவர் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மனுத் தாக்கல் செய்யவந்தார். ஆனால், தேர்தல் செலவுக் கணக்குகளை பராமரிக்க புதிதாக வங்கிக் கணக்கு தொடங்காமல் வந்ததால் வங்கிக் கணக்கு தொடங்கிவிட்டு அதுகுறித்த ஆவணங்களோடு வருமாறு அவரை தேர்தல் அதிகாரி திருப்பி அனுப்பிவிட்டார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீதர் கூறுகையில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரஜினிக்குத் தெரிவிக்கவில்லை.
கடந்த 1983ம் ஆண்டு முதல் ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ளோம். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது, எங்களின் பலத்தை நிரூபிக்கத் தான். ஏனென்றால், எங்களுக்கு பின்னால், ரசிகர் மன்றங்கள் துவக்கியவர்கள், கட்சி ஆரம்பித்து, இன்று வேட்பாளர் அறிவிக்கின்றனர். ஆனால், நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தான், இம்முறை இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்.
ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு எப்போதும் உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வற்புறுத்தலால், தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்துள்ளோம். எங்களுக்கு, தலைவர் ரஜினி உரிய அனுமதி கொடுத்தால், தேமுதிகவை விட அதிக ஓட்டு வாங்குவோம் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீதரை ரஜினி ஆதரிப்பாரா அல்லது அவரை விலகுமாறு உத்தரவிடுவாரா என்பது தெரியவில்லை.
ரூ 3.5 லட்சம் பறிமுதல்:
இந் நிலையில் இடைத்தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் நேற்றிரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாத்திரங்கள் வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 பேர் புதுக்கோட்டை பகுதியில் பாத்திரங்களை விற்று வந்தனர். நேற்று இரவு அவர்கள் லாரியில் சொந்த ஊருக்குச் சென்றபோது வாகன சோதனையில் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ 3.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இன்று காலை புதுக்கோட்டை தேர்தல் அதிகாரியை சந்தித்து தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டனர். பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பின்னர் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் கூறிவிட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications