பாகிஸ்தானில் 160 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் சேதம்
இஸ்லாமாபாத்: வடகிழக்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இந்து கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மூடப்பட்டிருந்த இநத் கோவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள கோரக்நாத் கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர் என்று உள்ளூர்வாசிகளும், போலீசாரும் தெரிவி்ததுள்ளனர். கோவிலில் இருந்த படங்களை எரித்ததோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோவிலி்ல் இருந்த சாமி சிலைகளை தூக்கிச் சென்றுள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளது இது 3வது முறையாகும் என்று கோவில் பாதுகாவலர் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போட்டால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்று இந்து மதத் தலைவர்கள் போலீசாரை வலியுறுத்தினர்.
நேற்று மாலை 6.30 மணி அளவில் கோவிலுக்கு வந்தபோது அங்கு 8 பேரைப் பார்த்ததாக கோவில் பாதுகாவலர் தெரிவித்தார். அவர்கள் சாமி சிலைகளைத் தூக்கி வீசிவிட்டு, அங்கிருந்த படங்கள், புனித நூல்களை எரித்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பெஷாவர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு தான் இந்த 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோரக்நாத் கோவில் திறக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பிறகு அந்த கோவில் பூட்டியே கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications