மத்திய அரசின் 3வது ஆண்டு நிறைவு விழா விருந்து- புறக்கணிக்கும் கருணாநிதி, மம்தா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக விருந்திற்கு செல்லவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக எம்.பி. டி.ஆர். பாலு கலந்து கொள்கிறார். மத்திய அரசு போதிய நிதி வழங்க மறுக்கிறது என்று புகார் கூறி வரும் மமதா தனது சார்பில் யாரையாவது விருந்துக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துவக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மத்திய அரசு 3வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் இன்று ஆந்திர மாநிலத்தில் இரு ரயில்கள் மோதியதில் 16 பேர் பலியாகினர், 35 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நாளை க்ளைமேக்ஸ்.. சொந்த கட்சியில் இருந்தே நீக்கப்படும் மம்தா? திரிணாமுலில் பெரும் குழப்பம்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications