சித்தார்த் மல்லையா மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெற ஜொஹால் தயார்?

இந்திய-அமெரி்க்கரான ஜொஹால் ஹமீது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் லூக் போமஸ்ர்பேக் மீது பாலியல் புகார் கொடுத்தார். இதற்கு அணியின் உரிமையாளரும், தொழில் அதிபருமான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா ஜொஹாலின் நடத்தை பற்றி டுவிட்டரில் கேள்வி எழுப்பினர்.
லூக் மீது புகார் கூறும் அந்த பெண் நேற்றிரவு என்னை உரசிக் கொண்டே இருந்தார். உண்மையிலேயே அவருடன் இருந்தவர் அவரது வருங்கால கணவர் என்றால், அவர் இப்படியா நடந்திருப்பார் என்று டுவிட்டரில் தெரிவித்தி்ருந்தார். இவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரி ஜொஹால் சித்தார்த் மல்லையாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் சித்தார்த் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை.
அவரது புகாரின்பேரில் லூக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்த அவர் ஜொஹாலுடன் தவறாக நடக்க முயன்றதை ஒப்புக் கொண்டார். மேலும் தான் அப்போது குடிபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சித்தார்த் மல்லையா தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்தற்கு மன்னிப்பு கேட்டால் லூக் மீதான வழக்கை வாபஸ் பெற அவர் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜொஹாலிடம் லூக் தவறாக நடக்க முயன்றதை தடுக்க வந்த அவரின் வருங்கால கணவரின் காதில் லூக் குத்தியதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகை ஆயிஷா தாக்கியாவின் சகோதரி நடாஷாவிடம் கிங்ஃபிஷர் ஊழியர்கள் மோசமாக நடந்ததற்கு அவர் டுவிட்டரில் கி்ங்ஃபிஷர் ஊழியர்களை சாடியிருந்தார். பதிலுக்கு சித்தார்த் மல்லையா, ஆயிஷா தாக்கியாவா யார் அது, அவர் என்ன ஏதாவது நடிகையா? நடந்ததை நேரில் பார்க்காமல் அவர் எப்படி இவ்வாறு டுவீட் செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு ஆயிஷா தாக்கியா சித்தார்த் மல்லையா முதலில் மரியாதையாக நடக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்திருந்தார். ஆக டுவிட்டரில் ஏதாவது கூறி சித்தார்த் பிரச்சனையில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications