பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகள் உயர்த்தப்பட்டன. இதையடுத்து ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் இவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை.
ஆனால் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துவிட்டதால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மத்திய எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் டாலரின் அளவு அதிகரித்துவிட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்தக் கோரி மத்திய அரசிடம் அழுதபோதும், அரசியல் காரணங்களுக்காக விலையை அரசு உயர்த்த விடவில்லை. இப்போது, எண்ணெய் வாங்க காசு இல்லை என்ற நிலை உருவாகி வருவதால், கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியிருக்க வேண்டிய விலையை ஒரேயடியாக உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதில் பெட்ரோலின் விலையை உயர்த்தியாகிவிட்டது.
ஆனால், மத்திய அரசுக்கு பெரும் நஷ்டத்தைக் கொடுத்து வருவது டீசல், சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவை தான். ஒரு லிட்டரை டீசலை விற்றால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 15.35 வரை நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
அதே போல 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சமையல் சிலிண்டரை விற்றால் ஏற்படும் நஷ்டம் கிட்டத்தட்ட ரூ. 480 ஆகும். இப்போது சிலிண்டர் ரூ. 420க்கு விற்கப்படுகிறது. அதன் உண்மையான விலை ரூ. 900 ஆகும். இந்த நஷ்டத்தில் முக்கால்வாசியை மத்திய அரசு மானியமாகத் தந்துவிடுகிறது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டமே.
அடுத்து பெரும் நஷ்டம் தருவது மண்ணெண்ணெய். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்றால் ரூ. 32.98 நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கேஸ், டீசல், மண்ணெண்ணெய் விற்பனையால் ஒரு நாளைக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் ரூ. 509 கோடியாகும்.
இதையடுத்து இவற்றின் விலைகளையும் மத்திய அரசு விரைவிலேயே உயர்த்தவுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விலைகளை நிர்ணயிக்கும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருள் விவகாரத்துக்கான அமைச்சர்கள் குழுவில் திமுகவும், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசும் இடம் பெற்றுள்ளன. இவர்களின் எதிர்ப்பால் டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலையை உயர்த்த முடியாத நிலை உள்ளது. இதனால் இந்தக் கமிட்டியின் கூட்டம் நடந்தே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.
இந் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை இந்தக் கமிட்டியின் கூட்டத்தைக் கூட்டி விலை உயர்வு குறித்து ஆலோசிக்க பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை நெருக்கி வருகின்றன. திமுக, திரிணமூல் ஏற்றால் இந்த விலை உயர்வு அமலுக்கு வரலாம்.
அதே சமயம் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையில் கை வைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. அவரை சமாதானப்படுத்தி விலையை உயர்த்த பிரதமர் மன்மோகன் சிங் முயற்சித்து வருகிறார்.
இதனால் மண்ணெண்ணெய்யை மட்டும் விட்டுவிட்டு டீசல், கேஸ் விலைகளும் விரைவில் உயரலாம் என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications