தனசேகரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை கே.கே.நகர் திமுக செயலாளர் தனசேகரனை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளரான தனசேகரன், சட்டப்பேரவைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தனசேகரன் மீது ஜார்ஜ், கலைவாணி, பரமேஸ்வரி, ஜீவானந்தம் உள்பட 6 பேர் நில அபகரிப்பு மோசடி புகார் செய்தனர்.
இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தனசேகரன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனசேகரனை 16-9-2011 குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தர விட்டார்.
இதை தொடர்ந்து தனசேகரன் மனைவி விஜயகுமாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் தர்மா ராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விஜயகுமாரியின் மனுவை விசாரித்தது. தனசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது செல்லாது என்றும் அந்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சிறையிலிருந்து தனசேகரன் விடுதலையாக உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications