அன்னா ஹசாரே குழுவில் கலகம்- கெஜ்ரிவாலுக்கு எதிராக மற்றொரு உறுப்பினர் பகிரங்க கடிதம்
மும்பை: சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் கட்சிகளைப் போலவே குழு மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து சர்ச்சைகளுக்கும் நாயகனாக இருக்கும் கெஜ்ரிவால்தான் இம்முறையும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அன்னா ஹசாரே குழு சார்பில் ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இந்த தளத்தை ஷிவேந்திர சவுகான் என்பவர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த சவுகானுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இப்போது மோதல். சவுகான் தன்னிச்சையாக செயல்படுவதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
கெஜ்ரிவாலின் புகார்களுக்குப் பதிலளித்து பேஸ்புக்கில் பகிரங்கமாக சவுகான் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹசாரே இயக்கத்தின் நலனுக்கு எதிராக நான் செயல்படுகிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் இயக்கம். எங்களில் பலர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த இயக்ககத்தில் இணைந்துள்ளோம். இதில் இணைவதற்கு எந்தவித சம்பிரதாய நடை முறைகளும் கிடையாது. எனவே, ஒரு குழு மூலம் ஒருவரை நீக்க முடியும் என்ற கேள்விக்கே இடமில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது மிகப் பெரிய பணியாகும். எந்த வழி சாத்தியமோ அந்த முறையில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும்.
உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்து எடுக்கப்படவில்லை. இவர்களை தேர்ந்து எடுப்பதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறையும் வகுக்கப்படவில்லை. கெஜ்ரிவால் உள்பட உயர்நிலைப் குழு உறுப்பினர்கள் சிலர் முறைப்படி இப்பதவியை பெறவில்லை என்று காட்டமாக எழுதப்பட்டிருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications